தேசியம்
செய்திகள்

வதிவிட பாடசாலைகளில் இருந்து தப்பியவர்கள் வலியை உணர்ந்தேன்: திருத்தந்தை

கனடாவின் வதிவிட பாடசாலைகளில் இருந்து தப்பியவர்கள் வலியை தனது பயணத்தின் போது உணர்ந்ததாக திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் தனது ஆறு நாள் கனடிய பயணத்தை கடந்த வெள்ளிக்கிழமை நிறைவு செய்தார்.

இந்த நிலையில் புதன்கிழமை (03) தனது வாராந்த பொது பார்வையாளர் உரையை கடந்த வாரம் கனடாவிற்கு மேற்கொண்ட தனது பயணத்திற்கு அவர் அர்ப்பணித்தார்.

கத்தோலிக்க திருச்சபை கனடாவின் வதிவிட பாடசாலைகளில் நிகழ்த்திய துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் தனது உரையில் திருத்தந்தை கூறினார்.

கனடாவின் வதிவிட பாடசாலைகளில் கத்தோலிக்க திருச்சபை ஆற்றிய பங்கிற்கு போப் பிரான்சிஸ் தனது கனடிய பயணத்தின் போது பலமுறை பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார்.

கனடிய வதிவிடப் பாடசாலைகளில் முதற்குடி மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாகினர் எனவும் திருத்தந்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவுக்கான ஸ்ரீலங்காவின் தூதுவராக சுமங்கல டயசை பரிந்துரைக்கும் இலங்கை அரசின் கோரிக்கையை நிராகரியுங்கள் – கனடிய அரசாங்கத்திடன் NCCT வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

கனடாவின் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதி விரைவில் நியமிக்கப்படவுள்ளார்

Lankathas Pathmanathan

2022 குளிர்கால ஒலிம்பிக் விடயத்தில் சீனாவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை கனடா எடுக்க வேண்டும்!

Gaya Raja

Leave a Comment