December 12, 2024
தேசியம்
செய்திகள்

நாடாளுமன்ற வளாக வாசல் கதவை வாகனத்தால் மோதிய நபர் கைது

கனடிய நாடாளுமன்ற வளாக வாசல் கதவை வாகனத்தால் மோதிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதன்கிழமை (03) அதிகாலை 3:30 மணியளவில் நாடாளுமன்ற முன் வாசல் மீது வாகனத்தால் மோதிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக Ottawa காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் Ottawa நகரை சேர்ந்த 29 வயதான Maxwell Pate என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் மீது பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய குற்றச் சாட்டுகள் பதிவாகியுள்ளன.

மூன்று வாரங்களாக தொடர்ந்த சுதந்திர பேரணியை தொடர்ந்து கடந்த February மாதம் முதல் நாடாளுமன்றத்திற்கு முன்னால் உள்ள Wellington வீதி வாகனங்களுக்கு மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புதன்கிழமை Ottawaவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் வெளியே உள்ள வாசல் கதவில் சுற்றுலாப் பேருந்து மோதியுள்ளது.

இந்த இரண்டு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related posts

இடர்கால உதவித் திட்டங்களை நீட்டிக்கும் அரசாங்கம்!

Gaya Raja

போலியான இரண்டு டொலர் நாணயங்கள் கனடா முழுவதும் பாவனையில்?

Lankathas Pathmanathan

Markham விடுதியில் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை

Lankathas Pathmanathan

Leave a Comment