June மாத வீடு விற்பனை கடந்த ஆண்டை விட 24 சதவீதம் குறைந்துள்ளதாக கனடிய வீடு விற்பனை சங்கம் தெரிவித்துள்ளது.
May மாதத்திலிருந்து வீடு விற்பனை ஆறு சதவீதம் வரை குறைந்துள்ளதாக வெள்ளிக்கிழமை (15) வெளியான அறிக்கை தெரிவிக்கின்றது.
June மாதத்தில் தேசிய ரீதியில் வீடுகளின் விலை கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்து இரண்டு சதவீதம் சரிந்துள்ளது
கனடிய மத்திய வங்கி, தனது முக்கிய வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருவதால், எதிர்கொள்ளப்படும் நிதி அழுத்தங்கள் இந்த வீழ்ச்சிக்கு காரணம் என வீடு விற்பனை சங்கம் தெரிவித்துள்ளது.
கனடிய மத்திய வங்கி கடந்த புதன்கிழமை அதன் முக்கிய வட்டி விகிதத்தை ஒரு சதவீத புள்ளியால் 2.5 சதவீதமாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.