தேசியம்
செய்திகள்

Ontario நான்காவது தடுப்பூசிகளுக்கான தகுதியை விரிவுபடுத்துகிறது

Ontario நான்காவது COVID தடுப்பூசிகளுக்கான தகுதியை 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் விரிவுபடுத்துகிறது.

வியாழக்கிழமை (14) முதல் 18 வயதிற்கும் 59 வயதிற்கும் உட்பட்ட அனைவருக்கும் Ontario நான்காவது COVID தடுப்பூசியை அனுமதிக்கும் என தலைமை மருத்துவ அதிகாரி Dr. Kieran Moore கூறினார்.

ஐந்து மாதங்களுக்கு முன்னர் மூன்றாவது தடுப்பூசியை பெற்றவர்களும் மூன்று மாதங்களுக்கு முன்னர் COVID தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களும் வியாழன் முதல் நான்காவது தடுப்பூசியை பெறலாம் என Dr.Moore புதன்கிழமை கூறினார்.

18 முதல் 59 வயதிற்குட்பட்ட, நீரிழிவு அல்லது இதய நோய் போன்ற அடிப்படை நோய்களைக் கொண்டவர்கள் நான்காவது தடுப்பூசியை பெறுவதற்கான சந்தர்ப்பம் இது என Moore தெரிவித்தார்.

பொதுவாக ஆரோக்கியமாக உள்ள ஏனையவர்கள் Omicron குறிப்பிட்ட bivalent தடுப்பூசிகளுக்காக காத்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இந்த தடுப்பூசி இலையுதிர்காலத்தில் கனடாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

உக்ரேனிய இராணுவத்துடன் இணைந்து போரிட்ட இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

சட்டவிரோத மருந்துகளால் பலியாகும் முதற்குடியினர் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Winnipeg நகரில் “தீவிரமான சம்பவமொன்றில்” மூவர் கொலை – இருவர் காயம்!

Lankathas Pathmanathan

Leave a Comment