தேசியம்
செய்திகள்

Conservative கட்சி Poilievreக்கு ஆதரவாக செயல்படுகிறது: Patrick Brown குற்றச்சாட்டு

Conservative கட்சி Pierre Poilievreக்கு ஆதரவாக செயல்படுவதாக Patrick Brown பிரச்சாரம் குற்றம் சாட்டுகிறது.

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து Patrick Brown தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஏற்பாட்டுக் குழுவின் அமைப்பாளர்களால் இந்த முடிவு செவ்வாய்க்கிழமை (05) எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கட்சி Poilievreக்கு ஆதரவாக செயல்படுவதாக Brown பிரச்சாரம் புதன்கிழமை (06) அதிகாலை வெளியான அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

தலைமை தேர்தல் அதிகாரியின் பரிந்துரையை அடுத்து Brown தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் ஏற்பாட்டுக் குழு செவ்வாய் இரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தலைமை தேர்தல் ஏற்பாட்டுக் குழுவினால் பெறப்பட்ட புதிய தகவல்களின் அடிப்படையில் இந்த தகுதி நீக்கம் உறுதிப்படுத்தப்பட்டது.

“சமீபத்திய வாரங்களில், கனடா தேர்தல்கள் சட்டத்தின் நிதி விதிகளை மீறியதாகத் தோன்றும் Patrick Brown பிரச்சாரத்தின் தீவிரமான தவறான குற்றச்சாட்டுகளை எங்கள் கட்சி அறிந்தது” என இந்த முடிவு குறித்து தலைமை தேர்தல் ஏற்பாட்டுக் குழு தலைவர்
Ian Brodie ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஆனாலும் Brown மீதான அநாமதேய குற்றச்சாட்டுகள் இவை என கூறும் அவரது பிரச்சாரம் , இதற்கு எதிராக சட்ட ஆலோசனையை பெறுவதாகவும் கூறியுள்ளது.

Related posts

கனேடியத் தமிழர் கூட்டு புதிதாக உருவாக்கப்படும் ஒரு அமைப்பு அல்ல

Lankathas Pathmanathan

கனடிய பொருட்கள் மீதான அமெரிக்க வரி எச்சரிக்கை தீவிரமானது: Justin Trudeau

Lankathas Pathmanathan

ஏழு நாட்களில் 109 புதிய COVID இறப்புகள் Ontarioவில் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment