தேசியம்
செய்திகள்

கனடா தின நீண்ட வார இறுதியில் 12 பேர் Ottawaவில் கைது

கனடா தின நீண்ட வார இறுதியில் 12 பேர் கைது செய்யப்பட்டதாக Ottawa காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2019ஆம் ஆண்டின் பின்னர் பெருமளவு பொதுமக்கள் கலந்து கொண்ட கனடா தின நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கனடா தின விடுமுறையை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் குடியிருப்பாளர்களும் Ottawaவில் கொண்டாடினர்.

இவர்களில் கடந்த February மாதம் Ottawa நகரத்தை முடக்கிய “Freedom Convoy” இயக்கத்துடன் தொடர்புடைய பல நூறு எதிர்ப்பாளர்களும் இருந்தனர்

இதில் 50 குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாகவும், கனடா தின நிகழ்வுகள் அல்லது போராட்டங்களில் ஈடுபடாதவர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டதாகவும் Ottawa காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்த பேச்சுக்கள் ஆரம்பம்!

Gaya Raja

கனடிய அரசாங்கத்திற்கு உக்ரைன் முன்னுரிமையாக இருக்க வேண்டும்: Conservative கட்சி வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

மீண்டும் இடைத் தேர்தல் சவாலை எதிர்கொள்ளும் Justin Trudeau?

Lankathas Pathmanathan

Leave a Comment