தேசியம்
செய்திகள்

Vancouver விமான நிலையத்திற்கு அருகில் தமிழர் சடலம் கண்டுபிடிப்பு

British Colombia மாகாணத்தின் Vancouver சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தமிழருடையது என காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 64 வயதான நெடுஞ்செழியன் வசீகரன் புஷ்பராஜ் என அடையாளம் காணப்பட்டார்.

May மாத ஆரம்பத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட இவர் சடலமாக மீட்கப்பட்டார் என Richmond RCMP உறுதிப்படுத்தியது.

May மாதம் 9ஆம் திகதி காணாமல் போனதாக முறையிடப்பட்டபோது அவர் அதிக போதையில் இருந்ததாக காவல்துறையினரின் அறிக்கையில் கூறப்பட்டது.

இவர் எவ்வாறு இறந்தார் என்பதை காவல்துறையினர் அறிவிக்காத போதிலும், அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என தெரிவித்தனர்.

இலங்கை பண்டாரவளையைப் பிறப்பிடமாக கொண்ட நெடுஞ்செழியன் வசீகரன் புஷ்பராஜ் May மாதம் 9ஆம் திகதி காலமானதாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவரது இறுதி கிரியைகள் June மாதம் 4ஆம் திகதி நடைபெற்றது.

Related posts

தொற்றின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எச்சரிக்கை

Lankathas Pathmanathan

அத்தியாவசியமற்ற சர்வதேச பயணத்திற்கு எதிராக மத்திய அரசாங்கம் அறிவுறுத்தல்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 22ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment