தேசியம்
செய்திகள்

வார விடுமுறையின் புயல் காற்றின் காரணமாக பத்து பேர் மரணம்

கடந்த சனிக்கிழமை தெற்கு Ontarioவிலும், Quebecகின் சில பாகங்களிலும் பெய்த இடியுடன் கூடிய மழையின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்தது.

இடியுடன் கூடிய பலத்த காற்று வீசியதில் பெரும் உடைமை சேதங்கள் ஏற்பட்டதுடன் மின் தடைகளும் அறிவிக்கப்பட்டன.

இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை (24) வரை இரண்டு மாகாணங்களிலும் தொடர்ந்தும் பலரும் மின்சார தடைகளை எதிர்கொள்கின்றனர்.

வாடிக்கையாளர்கள் மின்சார சேவையை முழுமையாக பெற பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக செவ்வாயன்று மின்சார வழங்குநர்கள் எச்சரித்தனர்.

செவ்வாய் மதியம் வரை சுமார் 74 ஆயிரம் வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக Hydro Ottawa தெரிவித்துள்ளது.

Ontario மாகாண மின்சார வழங்குநர் Hydro One, 148 ஆயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக கூறுகிறது.

Ontarioவில் Uxbridge, Clarence-Rockland, Township of Greater Madawaska ஆகியன சேதத்தின் விளைவு காரணமாக தொடர்ந்தும் அவசர கால நிலையில் உள்ளன.

Ontario தாண்டி Quebecகில் சுமார் 120 ஆயிரம் வாடிக்கையாளர்களை இந்த மின்சார தடைகள் பாதித்துள்ளதாக Hydro Quebec செவ்வாய் மதியம் அறிவித்தது.

அதேவேளை இந்த புயலின் பின்னர் காப்பீட்டு உரிமை கோரல்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

42 வயதான OPP அதிகாரி சூட்டுக் கொலை

Lankathas Pathmanathan

சட்டவிரோத எதிர்ப்பு நடவடிக்கைகள்  முடிவுக்கு வர வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

கனடா தின வானவேடிக்கை உங்கள் நகரங்களில் உள்ளனவா?

Lankathas Pathmanathan

Leave a Comment