தேசியம்
செய்திகள்

NDP வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும்: Jagmeet Singh

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் Jagmeet Singh கூறினார்.
இந்த ஆவணத்தின் சில பகுதிகளை விமர்சிக்க முயன்ற அவர், சாதகமான சில விடயங்களுக்கு உரிமை கோரினார்.
சிறுபான்மை Liberal அரசாங்கத்தை குறைந்தபட்சம் 2024 வரை ஆதரிப்பதாக NDP கட்சி அண்மையில் உறுதியளித்துள்ளது.
ஆனாலும் தாங்கள் இந்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதாக Conservatives, Bloc Québécois கட்சிகள் கூறின.
இது ஒரு பொறுப்பற்ற வரவு செலவு திட்டம் என அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி தலைவரான Candice Bergen விமர்சித்தார்.

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட கனடியர்களால் நிதியளிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் இது என அவர் கூறினார்.

கனடாவின் மிக முக்கியமான பிரச்சனைகள் புதிய வரவு செலவு திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என Candice Bergen கூறினார்.

பிரதமர் Justin Trudeau, NDPயை திருப்திப்படுத்த வரிகள் அதிகரிப்பு மூலம் , செலவீனங்களை அதிகரிக்கின்றார் என அவர் குற்றம் சாட்டினார்
வரவு செலவு திட்டத்தின் மூலம் NDP-Liberal அரசாங்கம், கட்டுப்பாடற்ற செலவுகளையும் அதிக வரிகளையும்  இரட்டிப்பாக்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Related posts

கனடாவுடனான எல்லை மீண்டும் விரைவில் திறக்கப்பட வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறதா?

Gaya Raja

Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் – நீதன் சான்

Lankathas Pathmanathan

உண்மையை வெளிக்கொணர்வது பொது ஒழுங்கு அவசர ஆணைக்குழுவின் முக்கிய குறிக்கோள்

Lankathas Pathmanathan

Leave a Comment