தேசியம்
செய்திகள்

ரஷ்ய, பெலாரஷ் அரசாங்க ஆதரவாளர்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகள்

ரஷ்ய, பெலாரஷ் அரசாங்கத்துடன் நெருக்கமானவர்கள் மீதான புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த கனடா அறிவித்துள்ளது.

உக்ரேனில் தொடரும் யுத்தத்திற்கு மத்தியில் இந்த புதிய தடை குறித்து கனடா ஆலோசிக்கிறது.

ஒன்பது ரஷ்யர்கள், ஒன்பது பெலாரசியர்கள் மீது இந்த தடைகள் விதிக்கப்படவுள்ளது.

தடை விதிக்கப்படுபவர்களின் அடையாளங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

உக்ரைனின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, சுதந்திரத்தை மீறுவதற்கு வழிவகுத்து செயல்படுத்தியதற்காக இந்த தடைகள் விதிக்கப்படுவதாக  கனடிய அரசாங்கம் திங்கட்கிழமை (04) கூறியது.

உக்ரைனுக்கும் அதன் மக்களுக்கும் ஆதரவளிக்க கனடா எடுத்த பல நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, இந்த நடவடிக்கைகள் அமைவதாக கனடா தெரிவித்தது.

Related posts

மீண்டும் வட்டி விகித உயர்வை அறிவித்த கனடிய மத்திய வங்கி!

Lankathas Pathmanathan

மத்திய வங்கி ஏன் வட்டி விகிதத்தில் அதிகரிப்பை அறிவிக்கவில்லை?

Lankathas Pathmanathan

Ontarioவில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை!

Lankathas Pathmanathan

Leave a Comment