NATO செலவின இலக்கிலிருந்து கனடா வெகு தொலைவில் உள்ளதாக சமீபத்திய மதிப்பீடு சுட்டிக்காட்டுகிறது
புதிய NATO புள்ளிவிவரங்கள் கனடா, இராணுவக் கூட்டணியின் செலவின இலக்கில் முன்னர் நம்பியதை விட தொலைவில் உள்ளது என தெரிவிக்கிறது.
2021ஆம் ஆண்டில் கனடா தனது தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.39 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிடும் என NATO கடந்த June மாதம் மதிப்பிட்டது.
ஆனால் வியாழக்கிழமை (31) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் கூட்டணி அந்த எண்ணிக்கையை குறைத்துள்ளது.
கனடா, கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.36 சதவீதத்தை மட்டுமே தனது இராணுவத்திற்காக செலவிட்டதாக புதிய தரவுகளில் மதிப்பிட்டுள்ளது.
இந்த மாறுபாடு சிறியதாகத் தோன்றினாலும், 2014 இல் அனைத்து NATO உறுப்பினர்களும் ஒப்புக்கொண்டு, கடந்த வாரம் ஒரு சிறப்புக் கூட்டத்தின் போது மீண்டும் உறுதிப்படுத்திய இரண்டு சதவீத செலவின இலக்கிலிருந்து இது கனடாவை நகர்த்துகிறது.
பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்க அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் இன்று காலை தெரிவித்தார்.
அடுத்த வாரம் மத்திய வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.