தேசியம்
செய்திகள்

1973ஆம் ஆண்டின் பின்னர் 2020இல் மிகக் குறைந்த விவாகரத்துகள் கனடாவில் பதிவு

1973ஆம் ஆண்டின் பின்னர் 2020ஆம் ஆண்டில் கனடாவில் மிகக் குறைந்த விவாகரத்துகள் பதிவாகியதாக புள்ளி விபரத்  திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
2020 இல் 42,933 விவாகரத்துகள் வழங்கப்பட்டதாக புள்ளி விபரத்  திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது 2019ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 56,937 விவாகரங்களில் இருந்து மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.
 பல ஆண்டுகளாக விவாகரத்துகள் பொதுவாக குறைந்து வருவதாகவும், 2020 இன் எண்ணிக்கை பல தசாப்தங்களில் மிகக் குறைவாக இருப்பதாகவும் புள்ளி விபரத்  திணைக்களம் கூறியது.
COVID தொற்று காலத்தில் நீதிமன்ற சேவைகளை பெறுவதற்கான தடைகள் இந்த சரிவுக்கு பங்களித்திருக்கலாம் எனவும் புள்ளி விபரத்  திணைக்களம் குறிப்பிட்டது.

Related posts

71 சதவீதமான ஆசனங்களை வென்றார் Legault!

Lankathas Pathmanathan

நினைவு தின நிகழ்வுகளில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு!

Lankathas Pathmanathan

Andrea Horwath வகித்த பதிவுக்கான இடைத் தேர்தல் அறிவிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment