COVID தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு முகமூடிகள் தொடர்ந்தும் அவசியமானவை என கனடாவின் தலைமை மருத்துவர் Dr. Theresa Tam தெரிவித்தார்.
சில மாகாணங்கள் முகமூடிகளை அணிய வேண்டும் என்ற தேவையை கைவிடும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க நீங்கள் செய்யக்கூடிய முக்கியமான விடயம் முகமூடி அணிவது என வைத்தியர் வெள்ளிக்கிழமை (25) கூறினார்.
Alberta, Saskatchewan, Manitoba உள்ளிட்ட மாகாணங்கள், தொற்று கட்டுப்பாடுகளை நீக்க ஆரம்பித்துள்ளன.
இவற்றில் March 15 முதல் முகமூடி கட்டளைகளை நீக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.