தேசியம்
செய்திகள்

கனடிய தயாரிப்பான COVID தடுப்பூசிக்கு Health கனடா அங்கீகாரம்

கனடாவில் தயாரிக்கப்பட்ட Medicago COVID தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்துள்ளது.

Covifenz எனப்படும் கனடாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்துள்ளது.

கனடாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது COVID தடுப்பூசி இதுவாகும்.

உலகின் முதல் தாவர அடிப்படையிலான சிகிச்சைக்கு Health கனடா ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த  தடுப்பூசி 18 முதல் 64 வயதுடையவர்களுக்கு பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தடுப்பூசிகளாக இது வழங்கப்பட வேண்டும் என Health கனடா தனது அனுமதியில் தெரிவித்தது.

இரண்டு தடுப்பூசிகளும் 21 நாட்கள் இடைவெளியில் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது

18 வயதிற்குட்பட்ட, 64 வயதிற்கு மேற்பட்டவர்களில் அதன் செயல்திறன், பாதுகாப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என Health கனடா கூறுகிறது.

இரண்டாவது தடுப்பூசிக்கு ஒரு வாரத்திற்கு பின்னர் தொற்றுக்கு எதிராக Covifenz 71 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவ பரிசோதனைகள் பரிந்துரைத்தன.

தகுதியான கனடியர்களில் 88 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியும், 84 சதவீதத்துக்கும் அதிகமானோர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

கனேடியர்களில் நாற்பத்து நான்கு சதவீதம் பேர் booster தடுப்பூசியும் பெற்றுள்ளனர்.

Related posts

முதலாவது Moderna தடுப்பூசி ஏற்றுமதி கனடாவை வந்தடைந்தது

Lankathas Pathmanathan

கனடா குடியேற்றத்தைக் கையாளும் விதத்தில் COVID நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்: குடிவரவு அமைச்சர்

Lankathas Pathmanathan

Ontarioவில் குறைவடையும் எரிபொருளின் விலை

Leave a Comment