தேசியம்
செய்திகள்

Conservatives கட்சியின் இடைக்கால தலைவரானார் Bergen

Conservatives கட்சியின் இடைக்கால தலைவராக Candice Bergen நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமை பதவியிலிருந்து Erin O’Toole முறைப்படி விலகியதை அடுத்து இந்த நியமனம் நிகழ்ந்தது.

புதன்கிழமை (02) மாலையில் தனிப்பட்ட வாக்கெடுப்பைத் தொடர்ந்து இடைக்காலத் தலைவராக Bergen நியமிக்கப்பட்டார்.

கட்சியின் துணைத் தலைவராக இருந்த Bergen, தனிப்பட்ட விருப்பு வாக்குச் சீட்டில் ஒன்பது வேட்பாளர்களில் முதலிடத்தைப் பெற்றார்.

இவர் 2008 ஆம் ஆண்டு முதல் Manitoba மாகாணத்தின் Portage—Lisgar தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

புதன்கிழமை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் Erin O’Tooleலை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பெரும்பான்மையான Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்தனர்.
118 Conservative நாடாளுமன்ற உறுப்பினர்களில் 73 பேர் O’Tooleலை தலைமை பதவியில் இருந்து  நீக்குவதற்கு வாக்களித்தனர்.

Related posts

உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய நாளில் அரசியல் தலைவர்கள் பகிரும் எண்ணங்கள்!

Gaya Raja

‘Rolling Thunder’  பேரணி, சுதந்திர தொடரணி trucker போராட்டங்கள் போல் அமையாது: Ottawa காவல்துறை

Lankathas Pathmanathan

நான்கு மாகாணங்களில் வெப்ப எச்சரிக்கை

Leave a Comment