December 12, 2024
தேசியம்
செய்திகள்

Quebec சுகாதார அமைப்பு பலவீனமாக உள்ளது: பொது சுகாதார இயக்குனர்

COVID தொற்றுக்கு மத்தியில் Quebec சுகாதார அமைப்பு பலவீனமாக உள்ளது என மாகாண இடைக்கால பொது சுகாதார இயக்குனர் கூறினார்.

சுகாதார கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான சாத்தியக்கூறு அடுத்த சில வாரங்கள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை January இறுதி வாரத்தில் 25 சதவீதம் குறைந்துள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Quebecகில் புதன்கிழமை (02) 50 புதிய COVID மரணங்கள் பதிவாகின.

நாடளாவிய ரீதியில் தொற்றின் காரணமாக 9,608 பேர் வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.

மரணங்களின் எண்ணிக்கை இதுவரை 34,194ஆக பதிவாகியுள்ளது.

Related posts

பாதுகாப்புப் படைத் தலைவராக பதவி ஏற்ற முதல் பெண்

Lankathas Pathmanathan

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதை வரவேற்கும் CTC!

Lankathas Pathmanathan

கனடாவின் வருடாந்த பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment