தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு Ontario மாகாண அரசாங்கம் நிதியுதவி ஒன்றை திங்கட்கிழமை (31)அறிவித்தது.
தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான 50 ஆயிரம் டொலர் நிதியுதவியை மாகாண கல்வி அமைச்சர் Stephen Lecce அறிவித்தார்.
சுய பாதுகாப்பு உத்திகளைக் கண்டறிந்து, சமாளிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் இந்த நிதி உதவும் என இந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டது.
இந்த உதவி நிதி அமைச்சர் ஊடாக Ontario மாகாண மானியத்தின் மூலம், வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஆனாலும் இந்த நிதி எவ்வாறு பிரித்தளிக்கப்படும் உட்பட பல கேள்விகளுக்கு கல்வி அமைச்சு பதிலளிக்கவில்லை.
இந்த அறிவித்தலின் போது தமிழ் மாகாண சபை உறுப்பினர்கள் விஜய் தணிகாசலம், லோகன் கணபதி ஆகியோரும் உடனிருந்தனர்.