December 12, 2024
தேசியம்
செய்திகள்

பிரதமரின் குழந்தைகளில் ஒருவருக்கு COVID தொற்று உறுதி

பிரதமர் Justin Trudeauவின் குழந்தைக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டதால் பிரதமர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தான் ஆரோக்கியமாக உள்ளதாகவும் தொற்றின் எந்த அறிகுறிகளும் இல்லை எனவும் Trudeau தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (28) காலை மற்றொரு விரைவு சோதனையை எடுத்தாகாவும், முந்தைய விரைவு சோதனையைப் போலவே இந்த விரைவு சோதனையையும் எதிர்மறையான முடிவை வழங்கியதாக பிரதமர் கூறினார்.

அவரது மூன்று குழந்தைகளில் யாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது என்ற தகவலை பிரதமர் வெளியிடவில்லை.

தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொண்டார் என வியாழக்கிழமை அறிவித்த Trudeau, ஐந்து தினங்களுக்கு தன்னை தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

Related posts

நாடளாவிய ரீதியில் புதன்கிழமை மொத்தம் 2,626 தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – May 28, 2022 (சனி)

Lankathas Pathmanathan

பாலஸ்தீனர்களுக்கு உதவ மேலதிகமாக $50 மில்லியன் டொலர் உதவியை அறிவித்த கனடா!

Lankathas Pathmanathan

Leave a Comment