தேசியம்
செய்திகள்

COVID தொற்றுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டிய நேரம்: Ontario மாகாண தலைமை மருத்துவ அதிகாரி

COVID தொற்றுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என Ontario மாகாண தலைமை மருத்துவ அதிகாரி Dr. Kieran Moore தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கணிசமான அளவு பயத்தில் எங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்த அனுமதித்துள்ள நிலையில் தற்போது அந்த சிந்தனையில் சிலவற்றை மாற்ற வேண்டும் என Moore வியாழக்கிழமை (27) தெரிவித்தார்.

COVID தடுப்பூசிகள், புதிய தொற்று எதிர்ப்பு மருந்துகள், Ontarioவின் சிந்தனை மாற்றத்திற்கான காரணங்களாக அவர் கருதுகிறார்.

மாகாண சுகாதார பாதுகாப்பு அமைப்பில் January ஒரு கடினமான மாதமாகும் என கூறிய தலைமை மருத்துவ அதிகாரி, February அதிலிருந்து ஒரு மாற்றமாக அமையும் என கூறினார்.

Ontario எதிர்வரும் திங்கட்கிழமை (31) மீண்டும் திறக்கும் திட்டத்தில் அதன் முதல் படியை எட்டுகிறது.

அதேவேளை Ontario அவசரமற்ற அறுவை சிகிச்சைகளையும் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கிறது.

Related posts

September மாதம் பாடசாலைக்கு திரும்புவதற்கு Ontario தயாராக இருக்கும்!!

Gaya Raja

தணிக்கையை இரத்து செய்ய சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

Lankathas Pathmanathan

காணாமல் போன நகர சபை உறுப்பினரை தேடும் பணி தொடர்கிறது

Lankathas Pathmanathan

Leave a Comment