தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்த யாழ் நகர முதல்வர்

Toronto நகர முதல்வர் John Toryயை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு யாழ் நகர முதல்வர் மணிவண்ணன் விசுவலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

முதலாவது Toronto – யாழ் மாநகர தமிழ் மரபுரிமைத் திங்கள் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை (25) நடைபெற்றது.

Toronto நகர சபை உறுப்பினர் Jennifer McKelvie ஆதரவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் Toronto நகர முதல்வர் John Tory, யாழ் நகர முதல்வர் மணிவண்ணன் விசுவலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

இலங்கைக்கான தனது இரண்டு பயணங்கள் குறித்தும் யாழ்ப்பாணத்திற்கான தனது பயண அனுபவங்கள் குறித்தும் Toronto நகர முதல்வர் John Tory தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

கனடாவில் தமிழர்களின் வளர்ச்சி குறித்தும் முதல்வர் John Tory தனதுரையில் குறிப்பிட்டார்.

இம்முறை மெய்நிகர் நிகழ்வாக நடைபெற்ற தமிழ் மரபுரிமைத் திங்கள் அடுத்த ஆண்டில் நேரடி நிகழ்வாக நடைபெற வேண்டும் என கூறிய யாழ் நகர முதல்வர் மணிவண்ணன் விசுவலிங்கம், அதில் கலந்து கொள்ளும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கடந்த வருடம் தான் கைது செய்யப்பட்டபோது தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த Toronto நகர முதல்வர் John Toryக்கு யாழ் நகர முதல்வர் மணிவண்ணன் விசுவலிங்கம் தனதுரையில் நன்றி தெரிவித்தார்.

COVID கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் Toronto நகர முதல்வர் John Tory, Toronto நகர சபை உறுப்பினர் Jennifer McKelvie ஆகியோரை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து தமிழ் மக்களை நேரடியாக சந்திக்குமாறு உரிமையுடன் அழைப்பதாக யாழ் நகர முதல்வர் மணிவண்ணன் விசுவலிங்கம் கூறினார்.

 

Related posts

அவசர இராணுவ -சுகாதாரப் பாதுகாப்பு உதவி – கனடிய பிரதமரிடம் கோரும் Winnipeg நகர முதல்வர்

Gaya Raja

பனிப்புயல் காரணமாக மின்சாரத்தை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

கடவுச்சீட்டு விண்ணப்ப நிலுவை நீக்கப்பட்டுள்ளது!

Lankathas Pathmanathan

Leave a Comment