Omicron மாறுபாட்டின் காரணமாக மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்க படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி DR. Theresa Tam தெரிவித்தார்.
Omicron மாறுபாட்டால் இயக்கப்படும் சமீபத்திய COVID தொற்றின் அலை அதன் உச்சத்தை எட்டியிருக்கலாம் என வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில், சராசரி தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை 28 சதவீதம் குறைந்துள்ளது என Tam குறிப்பிட்டார்.
தினசரி சராசரியாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் 1,100க்கும் மேற்பட்டோர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
வரையறுக்கப்பட்ட சோதனைகள் தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை துல்லியமாக இல்லை என்பதை சுட்டிக் காட்டுவதாகவும் Tam கூறினார்.