தேசியம்
செய்திகள்

உக்ரைனில் ஆயுத மோதல் ஏற்படலாம்: கனடிய பிரதமர் அச்சம்

உக்ரைனில் ஆயுத மோதல் ஏற்படும் என கனடா அஞ்சுவதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.

ரஷ்யா ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கனடிய பிரதமரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் பெருகிவரும் ஆக்கிரமிப்புக்கு பிரதமர் Trudeau மீண்டும் கண்டனம் தெரிவித்தார்.

உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா காரணம் தேடுவதாகவும் Trudeau குற்றம் சாட்டினார்.

உக்ரைன் எல்லையில் உள்ள பல்வேறு பகுதிகளில் ரஷ்யாவின் இராணுவ நகர்வை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என Trudeau கூறினார்.

நிலைமை மேலும் தீவிரமடையும் பட்சத்தில் கடுமையான நகர்வுகளை முன்னெடுக்க கனடா தயாராக உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்

உக்ரைன் மக்களுக்கு எது சிறந்தது, உலகளவில் அமைதியை பேணுவதற்கு எது சிறந்தது என்பதன் அடிப்படையில் கனடிய அரசாங்கம் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் பிரதமர் Trudeau தெரிவித்தார்.

இந்த வாரம் உக்ரைனில் உயர் அதிகாரிகளை சந்திக்கும் கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly உட்பட, முக்கிய அமைச்சர்களுடன் செவ்வாய்க்கிழமை (18) சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

Related posts

Greenbelt திட்டங்கள் குறித்த முடிவு தவறு : Doug Ford

Lankathas Pathmanathan

வார விடுமுறையில் தமிழர் தெரு விழா!

Lankathas Pathmanathan

Conservative தலைமைப் போட்டியில் மேலும் இரண்டு வேட்பாளர்கள்!

Leave a Comment