தேசியம்
செய்திகள்

அரசியலில் இருந்து விலகும் அமைச்சர் Rod Phillips

Ontario அமைச்சரவையில் இருந்து விலகுவதாக Rod Phillips விலகுகின்றார்.

நீண்ட கால பராமரிப்பு அமைச்சர் Rod Phillip அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வெள்ளிக்கிழமை (14) அறிவித்தார்.

2018 ஆம் ஆண்டு முதல் Ajax தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முக்கிய அமைச்சாரான இவர் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார்.

Phillips அடுத்த மாதம் தனது பதவியில் இருந்து விலக்குவதாக கூறினார்.

இந்த அறிவித்தல் முதல்வர் Doug Ford தலைமையிலான Progressive Conservatives கட்சிக்குதேர்தலுக்கு முந்தைய பெரும் பின்னடைவாக நோக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், Ontarioவின் நீண்டகால பராமரிப்பு அமைப்பில் முக்கியமானதும் தேவையானதுமான மேம்பாடுகளை முன்னேற்றுவதற்கு Phillipsக்கு நன்றி தெரிவித்தார்.

Phillips உட்பட மொத்தம் எட்டு Progressive Conservatives கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

Related posts

Manitobaவில் 3 குழந்தைகள், 2 பெண்கள் இறந்ததை அடுத்து சந்தேக நபர் கைது

Lankathas Pathmanathan

June மாத நடுப்பதிக்குள் கனடாவை வந்தடையவுள்ள 20 இலட்சம் Moderna தடுப்பூசிகள்

Gaya Raja

Don Valley North தொகுதியின் மாகாணசபை உறுப்பினர் கட்சியில் இருந்து விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment