ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் வகுப்பு கற்றலுக்குத் திரும்புவார்கள் என British Colombia அரசாங்கம் கூறுகிறது.
கல்வி அமைச்சர் Jennifer Whiteside வெள்ளிக்கிழமை (07) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
Omicron மாறுபாடு வரவிருக்கும் வாரங்களில் பணியாளர்களை கணிசமாக பாதிக்கும் அபாயம் அதிகம் உள்ள போதிலும் இந்த முடிவை British Colombia அரசாங்கம் எடுத்துள்ளது.
வெவ்வேறு இடைவேளை நேரங்கள், மெய்நிகர் கூட்டங்கள், பார்வையாளர் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பாடசாலைகளில் அமுல்படுத்தப்படும் என Whiteside கூறினார்.
அரசாங்கத்தால் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கப்படவில்லை என்பதால் தொழிற்சங்கம் விரக்தி அடைந்துள்ளதாக மாகாணத்தின் ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் கூறினார்.