தேசியம்
செய்திகள்

Saskatchewan சுய-தனிமை தேவைகளிலும் சோதனை விதிகளிலும் மாற்றம்

Saskatchewan அரசாங்கம் அதன் சுய-தனிமை தேவைகளிலும் சோதனை விதிகளிலும் மாற்றங்களைச் செய்து வருகிறது.
சுய-தனிமைப்படுத்தல் காலம் 10 நாட்களில் இருந்து ஐந்து நாட்களுக்கு குறைக்கப்படுகிறது.

தடுப்பூசி போடப்படாதவர்கள் அல்லது பகுதியளவு தடுப்பூசி போடப்பட்டவர்கள் தொடர்ந்து  10 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என இன்று அறிவிக்கப்பட்டது.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் நோயறிதலை உறுதிப்படுத்த PCR பரிசோதனையை பெற வேண்டிய அவசியமில்லை எனவும் ஐந்து நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது .

தொற்றின் அறிகுறிகள் உள்ளவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்கள், நீண்ட கால மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களைக் கவனிப்பவர்கள் போன்ற முன்னுரிமை மக்களுக்கும் PCR சோதனை தொடர்ந்தும் பரிந்துரைக்கப்படுகிறது.

Saskatchewan சுகாதார ஆணையத்தின் சோதனைத் தளங்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சி இது என முதல்வர்  Scott Moe  கூறினார்.

Related posts

தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு மாகாணங்களுக்கு உதவ தயார் – பிரதமர் Trudeau

Gaya Raja

B.C. புதிய முதல்வராக David Eby பதவியேற்பு

Lankathas Pathmanathan

ஐந்து ஆண்டுகளில் Toronto வீட்டு விலைகள் 42 சதவீதம் – வாழ்க்கைச் செலவு 17 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment