Montreal நகரில் புதுப்பிக்கப்பட்ட அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
COVID தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் Montreal நகர முதல்வர் Valerie Plante அவசரகால நிலையை செவ்வாய்க்கிழமை (21) அறிவித்தார்.
கடந்த சனிக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர், தனது இல்லத்தில் இருந்து இன்று நடத்திய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தொற்றின் முதல் அலையின் போது Montrealலில் கடந்த வருடம் March மார்ச் 27ஆம் திகதி அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
17 மாதங்களுக்கு பின்னர் August மாதம் 27ஆம் திகதி 2021ஆம் ஆண்டு இந்த அவசர நிலை முடிவடைந்தது.