Nova Scotia செவ்வாய்க்கிழமை (21) ஒரு நாளுக்கான அதிக COVID தொற்றுகளை பதிவு செய்தது.
செவ்வாய்க்கிழமை 522 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.
இதன் மூலம் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக மாகாணம் அதிக எண்ணிக்கையில் ஒற்றை நாள் தொற்றுகளின் அதிகரிப்பை அறிவித்துள்ளது.
December 15 முதல், Nova Scotia 2,590 புதிய COVID தொற்றுக்களை அறிவித்துள்ளது.
தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக booster தடுப்பூசியை பெறக்கூடியவர்களின் தகுதியை விரிவுபடுத்தும் Nova Scotia, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.