தேசியம்
செய்திகள்

இலைதுளிர் கால பொருளாதார அறிக்கை எதிர்கட்சிகளினால் விமர்சிக்கப்பட்டன

Liberal அரசாங்கத்தின் இலைதுளிர் கால பொருளாதார மற்றும் நிதி மேம்படுத்தல் அறிக்கையை எதிர்கட்சிகள் விமர்சித்தனர்.

செவ்வாய்க்கிழமை (14) வெளியான அறிக்கையின் மூலம் கனடியர்களை முட்டாளாக்க முடியும் என நிதி அமைச்சர் நம்புகிறார் என Conservative தலைவர் Erin O’Toole விமர்சித்தார்.

18 வருட பணவீக்க உயர்வை மேற்கோள் காட்டிய O’Toole, அரசாங்கம் அதை தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறது என கூறினார்.

அவர்கள் சுட்டிக் காட்டத் தவறியது என்னவென்றால், அவர்களின் தவறான நிர்வாகம் இந்த நாட்டையும் கனேடிய குடும்பங்களையும் ஒரு பொருளாதார குன்றின் விளிம்புக்கு கொண்டு சென்றுள்ளது எனவும்  O’Toole கூறினார்.

கனடியர்கள் எதிர்கொள்ளும் தீவிரத்தன்மைக்கு இந்த அறிக்கை பதிலளிக்கவில்லை என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார்.

மளிகைப் பொருட்கள், எரிவாயு உள்ளிட்ட வீட்டுச் செலவுகளை நிவர்த்தி செய்யும் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்குப் பதிலாக, Liberal அரசாங்கம்  அதி பணக்காரர்களைப் பாதுகாப்பதாக Singh குற்றம் சாட்டினார்.

Related posts

உலகளாவிய சிறுவர் பாலியல் துஷ்பிரயோக விசாரணையில் கனடியர்கள் கைது

Lankathas Pathmanathan

கனடியர்கள் இருவருக்கு Hong Kong காவல்துறை பிடியாணை

Lankathas Pathmanathan

மோசடி குற்றச்சாட்டில் இருவர் கைது – மூவரை தேடிவரும் OPP

Lankathas Pathmanathan

Leave a Comment