ஒரு வீட்டைச் சேர்ந்த நான்கு பேர் இந்த திரிபால் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
கனடா அரசாங்கத்தால் அண்மையில் பயண தடை விதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றிற்கு இந்த குடும்பம் பயணம் செய்ததாக தெரியவருகின்றது
இந்த நபர்கள் அவர்களின் நெருங்கிய தொடர்புகள் அடையாளம் காணப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனால் சமூக பரவல் அபாயம் குறைவாக இருப்பதை விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதேவேளை Omicron திரிபின் நான்கு புதிய தொற்றுகளை Manitoba புதன்கிழமை அறிவித்தது.
Manitoba தனது முதல் Omicron திரிபை அறிவித்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்த அறிவித்தல் வெளியானது.
கனடா அரசாங்கத்தால் அண்மையில் பயண தடை விதிக்கப்பட்ட நாடுகள் ஒன்றிற்கு இவர்களில் ஒருவர் சமீபத்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
Ontarioவிலும் புதன்கிழமை Omicron திரிபின் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
கிழக்கு Ontarioவில் உள்ள ஒரு பொது சுகாதாரப் பிரிவு, பயண வரலாறு இல்லாத ஒருவரில் Omicron திரிபைக் கண்டறிந்ததாக கூறுகிறது.
அந்த நபர் எவ்வாறு திரிபால் பாதிக்கப்பட்டார் என்பதை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக பொது சுகாதாரம் மையம் கூறுகிறது.
கனடாவின் முதலாவது Omicron திரிவு கடந்த மாதம் 28ஆம் திகதி Ontarioவில் உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.