தேசியம்
செய்திகள்

British Colombia மாகாணத்திற்கான சிகப்பு எச்சரிக்கை: சுற்றுச்சூழல் கனடா

British Colombia மாகாணத்திற்கான சிகப்பு எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிடுகிறது.
இந்த இலையுதிர்காலத்தில் British Colombiaவில் அதிக அளவு மழை பெய்துள்ளதால் இந்த எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டது.
முந்தைய புயலால் ஏற்கனவே பேரழிவிற்குள்ளான மாகாணத்தின் சில பகுதிகளுக்கு முன்னோடியில்லாத வகையில் இந்த சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் கனடா வெளியிட்ட முதலாவது சிவப்பு நிலை எச்சரிக்கை இதுவாகும்.
இந்த நிலையில்  தெற்கு British Colombiaவை அடுத்த சில தினங்களில் இரண்டு புயல்கள் தாக்கும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது.

முதலாவது புயல் காரணமாக  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பலத்த மழை பெய்யும் எனவும்  இரண்டாவது புயல் அடுத்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மாகாணத்தை  தாக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதமரின் அமைச்சரவை மாற்றம்

Lankathas Pathmanathan

Ontarioவின் 18ஆவது முதல்வர் Bill Davis மரணம்!

Gaya Raja

கனடாவில் சராசரி வீட்டு வாடகை இந்த ஆண்டு 15.4 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment