தேசியம்
செய்திகள்

British Columbiaவில் மண்சரிவு காரணமாக குறைந்தது ஒருவர் பலி!

British Columbia மாகாணத்தின் பேரழிவுகரமான வெள்ளத்தால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறைந்தது ஒருவர்  மரணமடைந்துள்ளதாக RCMP உறுதிப்படுத்தியது.

Pemberton மற்றும் Lillooet  இடையே நெடுஞ்சாலை 99இல் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக செவ்வாய்கிழமை வெளியான அறிக்கையில் RCMP தெரிவித்தது .

காவல்துறையினர் அந்த பெண்ணின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு, அவரது மரணம் குறித்து அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மண்சரிவு காரணமாக மேலும் குறைந்தது இரண்டு பேர் காணாமல் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த பேரழிவுகரமான வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

British Columbiaவில் அமுலில் இருந்த வானிலை எச்சரிக்கைகள் செவ்வாய்கிழமை காலை தளர்த்தப்பட்டன.

கனடாவின் மேற்கு கடலோரத்தை தாக்கிய  ஒரு தீவிர புயல் British Columbiaவில் பேரழிவை ஏற்படுத்தியது.

அங்கு பல நாட்களாக பெய்த மழையால் பல சமூகங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.

Agassiz நகரில் மண்சரிவில் இருந்து 311 பேர் மீட்கப்பட்டனர்.

Abbotsford, British Columbiaவில் வெள்ளப் பெருக்கு காரணமாக 1,100க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து செவ்வாய்கிழமை குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சில போக்குவரத்துக்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும், வெள்ளம் மற்றும் மண்சரிவுகளின் விளைவாக பல நெடுஞ்சாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட British Columbia மாகாணத்திற்கு மீட்பு உதவியை வழங்க கனடிய அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

பேரழிவுகரமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு உதவ தயாராக இருப்பதாக பிரதமர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

British Columbia மாகாணத்திற்கு தேவையான ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அவசரகால தயார்நிலை அமைச்சர் Bill Blair  கூறினார்.

Related posts

கனடிய மத்திய வங்கியின் வட்டி விகித அறிவித்தல்

Lankathas Pathmanathan

Toronto வீடு விற்பனையில் சரிவு

Lankathas Pathmanathan

Ontario – 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் AstraZeneca தடுப்பூசியை பெறலாம்

Gaya Raja

Leave a Comment