தேசியம்
செய்திகள்

Quebec, Ontario மாகாணங்களில் தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!

COVID தொற்றின் எண்ணிக்கை Quebec, Ontario மாகாணங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வியாழக்கிழமை 663, 642 என முறையே Quebec, Ontario மாகாணங்களில் தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

Ontarioவில் இது October ஆரம்பத்தின் பின்னரான அதிக எண்ணிக்கையிலான நாளாந்த தொற்றுக்களாகும்.

இதன் மூலம் Ontarioவின் நாளாந்த தொற்றின் ஏழு நாள் சராசரி 532 ஆக உள்ளது.

இது கடந்த வாரத்தில் 383  ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழக்கிழமை 5  மரணங்கள் Ontarioவிலும் , 4 மரணங்கள் Quebecகிலும் பதிவானது.

Ontarioவில் தகுதியான மக்கள் தொகையில் 88.6 சதவீதம் ஒரு COVID தடுப்பூசியை பெற்றுள்ளனர் என சுகாதார அமைச்சர் Christine Elliott கூறினார்.

85.3 சதவீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகள் பெற்றுள்ள நிலையில் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களாக கருதப்படுகிறது.

Quebecகில் தகுதியான மக்கள் தொகையில் 90.8 சதவீதம் ஒரு COVID தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

88.3 சதவீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகள் பெற்றுள்ள நிலையில் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களாக கருதப்படுகிறது.

Related posts

தொற்றின் பரவல் காலத்தில் பொது தேர்தலா? எதிர்க்கட்சிகளே தீர்மானிக்கட்டும்: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan

Conservative கட்சி விமர்சகர்கள் பதவியில் மாற்றங்கள்

Lankathas Pathmanathan

கனடாவுக்கான பயணத்தை இரத்து செய்யுமாறு வெளியான அறிவுறுத்தல் தவறானது

Gaya Raja

Leave a Comment