December 12, 2024
தேசியம்
செய்திகள்

அகால மரணமான தமிழ் இளைஞனின் இறுதிக் கிரியைகள் நிறைவடைந்தன!

கடந்த வாரம் அகால மரணமான தமிழ் இளைஞனின் இறுதிக் கிரியைகள்  திங்கட்கிழமை  நடைபெற்றது.

MV Sun Sea கப்பலில் கனடா வந்தடைந்த நெடுஞ்செழியன் கோபாலபிள்ளை என்ற இளைஞர் கடந்த செவ்வாய்க்கிழமை அகால மரணமடைந்தார்.

இவரது பூதவுடல் ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும்  பார்வைக்கு வைக்கப்பட்டு திங்கட்கிழமை இறுதிக் கிரியைகள்  நடைபெற்றது.

இவர் 492 தமிழ் அகதிக் கோரிக்கையாளர்களுடன் 2010ஆம் ஆண்டு  August மாதம் British Colombia மாகாணத்தை வந்தடைந்த MV Sun Sea கப்பலில் பயணித்து கனடாவை வந்தடைந்தவராவார்.

இவரது அகதி கோரிக்கை கனடாவில் இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என நண்பர்கள் தேசியத்திடம் தெரிவித்தனர்.

தாயகத்தில் மட்டக்களப்பை சொந்த இடமாக கொண்ட இவர் சிவானந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.

Related posts

Ontario போக்குவரத்துத்துறை இணையமைச்சராகும் தமிழர்

Lankathas Pathmanathan

தேசிய மக்கள் சக்தி தலைவரை இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Lankathas Pathmanathan

Ontarioவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வியாழன் முதல் நான்காவது தடுப்பூசியை பெறலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment