உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய நாளான வியாழக்கிழமை அரசியல் தலைவர்கள் இந்த நாள் குறித்த தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
கனடாவில் உள்ள குடியிருப்பு பாடசாலைகளில் முதற்குடியினர் எதிர்கொண்ட நீடித்த வன்முறைகள் அனுபவித்த வலிமிகுந்த வரலாற்றையும் குணப்படுத்த அனைத்து கனேடியர்களுடன் இணைவதாக இரண்டாம் எலிசபெத் மகாராணி தெரிவித்தார்.
கடந்த காலத்தின் கொடூரங்களை ஒப்புக் கொள்ள முயலும்போது, முதற்குடி மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கு பக்கபலமாக நிற்பதுடன் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இணைந்து சேவையாற்ற வேண்டும் என ஆளுநர் நாயகம் Mary Simon கூறினார்
நல்லிணக்க பயணத்தில் நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு பங்கு வகிக்க முடியும் என்பது குறித்து இந்த தினத்தில் சிந்திக்குமாறு பிரதமர் Justin Trudeau வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்
கனடா ஒரு தேசமாக அதன் முழு திறனை அடையும் முயற்சிகளுக்கு நல்லிணக்கம் மையமாக இருக்க வேண்டும் என Conservative தலைவர் Erin O’Toole கூறினார்.