December 12, 2024
தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

230 வாக்குகளால் 2ஆம் இடத்தில் தமிழர் – முழுமையான முடிவு புதன்கிழமை இரவு வெளியாகும்!

திங்கட்கிழமை நடைபெற்று முடிந்த தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளர் போட்டியிட்ட தொகுதியின் முடிவு வெளியாகவில்லை.

Vancouver Granville தொகுதியில் NDP சார்பில் போட்டியிட்ட அஞ்சலி அப்பாதுரையின் தேர்தல் முடிவு இதுவரை வெளியாகவில்லை.

இந்தத் தொகுதியில் தேர்தல் முடிவு உறுதி செய்யப்படாத ஒரு நிலை செவ்வாய் இன்றிரவு வரை தொடர்கின்றது.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் அஞ்சலி அப்பாதுரை 230 வாக்குகளால் மாத்திரம் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அங்கு போட்டி மிக நெருக்கமாக உள்ள நிலையில் சுமார் 5,500 தபால் மூல வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலை உள்ளதாக தெரியவருகிறது.

புதன்கிழமை இந்த  தபால் மூல வாக்குகள் எண்ணிப்படவுள்ளன.

அதன் பின்னரே இந்த தொகுதியின் முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vancouver Granville தொகுதியின் தேர்தல் முடிவு (திங்கள் இரவு 11 மணி வரை (EST) அதிகாரப்பூர்வமற்றது)

Taleeb Noormohamed – Liberal -14,951- வாக்குகள்
Anjali Appadurai – NDP- 14,721- வாக்குகள்
Kailin Che – Conservative – 11,825 – வாக்குகள்
Imtiaz Popat – GRN – 1,331 –  வாக்குகள்
Damian Jewett – PPC – 1,101 – வாக்குகள்

கடந்த தேர்தலில் (2019) Vancouver Granville தொகுதியை சுயேச்சை உறுப்பினர் Jody Wilson-Raybould பிரதிநிதித்துவப்படுத்தினார்.

கடந்த முறை Wilson-Raybould 32.3 சதவீதம் வாக்குகளை பெற்றார்.

இம்முறை தேர்தலில் Wilson-Raybould போட்டியிடவில்லை.

Related posts

ஜெருசலேம் மசூதிக்குள் நிகழ்ந்த பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் கனடா

Lankathas Pathmanathan

Toronto அலுவலக துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கி தாரியும் பலி

Lankathas Pathmanathan

அதிகரிக்கும் தொற்றுக்களுக்கு மத்தியில் Manitobaவில் மேலும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Gaya Raja

Leave a Comment