பொது தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவில் இம்முறை சுமார் 5.8 மில்லியன் கனேடியர்கள் வாக்களித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான முன்கூட்டிய வாக்குப்பதிவு திங்கட்கிழமை முடிவுக்கு வந்தது.
தேர்தல் திணைக்களம் வழங்கிய ஆரம்ப புள்ளிவிவரங்களின்படி 5.78 மில்லியன் கனேடியர்கள் முன்கூட்டிய வாக்குப்பதிவில் தங்கள் வாக்குகளை அளித்தனர்.
இது 2019 தேர்தலில் பதிவான முன்கூட்டிய வாக்களிப்பை விட 18.5 சதவீத அதிகரிப்பாகும்.
அதேவேளை 2015 தேர்தலில் இருந்து இது 57 சதவீத அதிகரிப்பாகும்.இந்த எண்ணிக்கையில் தபால் மூல வாக்குகள் அடங்கவில்லை.
கனேடியர்கள் தபால் மூலம் வாக்களிக்க பதிவு செய்யும் காலக்கெடு செவ்வாய் மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.தேர்தல் வாக்களிப்பு எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.