மூன்று ஆண்டுகளில் ஒரு மில்லியன் வீடுகளைக் கட்டவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தடைகளை ஆதிகரிக்கவும் Conservative உறுதியளிக்கிறது.
வாடகை வீடுகள் உட்பட வீடுகளின் வழங்கல் நாட்டின் பெருகிவரும் மக்கள் தொகையை விட பின்தங்கியுள்ளது என Conservative தலைவர் Erin O’Toole வியாழக்கிழமை தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கனேடிய குடியிருப்பு சொத்துக்களில் தங்கள் பணத்தை முதலிடுவது வீட்டு நெருக்கடியை தூண்டுகிறது எனவும் அவர் கூறினார்.
தமது இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசுக்கு சொந்தமான 15 சதவீத கட்டடங்களை வீட்டுச் சந்தையில் வெளியிட கட்சி விரும்புகிறது எனவும் O’Toole கூறினார்.
கனடாவில் சராசரி வீட்டு விற்பனை விலை June மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு 26 சதவீதம் உயர்ந்து $679,000 ஆக உள்ளது என கனேடிய Real Estate சங்கம் கூறுகின்றது.