September 10, 2026
தேசியம்
செய்திகள்

கனேடியர்கள் அனைவருக்கும் வழங்குவதற்கு போதுமான தடுப்பூசிகளை இந்த வாரம் கனடா பெற்றுக் கொள்ளும்!

தகுதியுள்ள அனைத்து கனேடியர்களுக்கும் தடுப்பூசிகளை வழங்குவதற்கு போதுமான COVID தடுப்பூசிகளை கனடா இந்த வாரம் பெற்றுக் கொள்ளும்.

இந்த வாரம் சுமார் ஐந்து மில்லியன் தடுப்பூசியை மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இதன் மூலம் மொத்தம் 68 மில்லியன் தடுப்பூசிகளை கனடா பெறும்.

இது தகுதியுள்ள 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 33.2 மில்லியன் கனேடியர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளை வழங்குவதற்கு போதுமானதாக இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

வெள்ளிக்கிழமை வரை, கனேடியர்களில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 57 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர். மேலும் 79.66 சதவீதமான கனேடியர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது .

Related posts

போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட அமைப்பாளர்களில் ஒருவருக்கு பிணை மறுப்பு

Lankathas Pathmanathan

ஏழு மாகாணங்களுக்கு வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

B.C. புதிய ஜனநாயக கட்சியின் தலைமை பதவிக்கு தமிழர் போட்டி

Lankathas Pathmanathan

Leave a Comment