தேசியம்
செய்திகள்

Haiti ஜனாதிபதியின் படுகொலை சந்தேக நபர்களில் ஒருவர் கனேடிய தூதரகத்தின் முன்னாள் மெய்க்காப்பாளர்!

Haiti ஜனாதிபதியின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் கனேடிய தூதரகத்தின்  முன்னாள் மெய்க்காப்பாளர் ஒருவரும் அடங்குகின்றார்.

கடந்த புதன்கிழமை Haiti ஜனாதிபதி Jovenel Moïse அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 17 சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் Port au Princeசில் உள்ள கனேடிய தூதரகத்தின்  முன்னாள் மெய்க்காப்பாளர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கைது குறித்து அறிந்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. குறித்த சந்தேக நபர் 2010ஆம் ஆண்டு  வெளிவிவகார அமைச்சினால் பணியமர்த்தப்பட்ட ஒரு பாதுகாப்பு நிறுவனத்தால்  மெய்க்காப்பாளராக பணியாற்றினார் என தெரியவருகின்றது.

Related posts

கனடிய பிரதமர் – Alberta முதல்வர் சந்திப்பு!

Lankathas Pathmanathan

கனேடியர்கள் அனைவருக்கும் வழங்குவதற்கு போதுமான தடுப்பூசிகளை இந்த வாரம் கனடா பெற்றுக் கொள்ளும்!

Gaya Raja

Johnson & Johnson தடுப்பூசிகளை உபயோகத்திற்கு அனுமதிப்பதில்லை – Health கனடா முடிவு

Gaya Raja

Leave a Comment