தேசியம்
உள் உணர்ந்து

கனடா: தடுப்பூசியை ஏற்றுக்கொள்வது அரசியல் இல்லை!

COVID பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி வழங்கல் கனடா முழுவதும் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அமெரிக்காவைப் போலல்லாமல் கனேடியர்கள் தடுப்பூசி பெறுவதற்கு பரவலாக ஆதரவளிப்பதை அண்மைய கருத்துக் கணிப்பு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்காவைப் போலல்லாமல் தடுப்பூசி கனடாவில் அரசியலுடன் தொடர்புடைய ஒரு பாரபட்சமான பிரச்சினையாகத் தெரியவில்லை.

தேசிய அளவில், கனேடியர்களில் 80 சதவீதமானவர்கள் தாங்கள் ஏற்கனவே முதலாவது தடுப்பூசியை பெற்றுள்ளோம் அல்லது விரைவில் பெற விரும்புவதாக மிக சமீபத்திய தேசிய கணக்கெடுப்பில் கூறியுள்ளனர். வாக்களிக்கும் நோக்கங்களின்படி இந்த கேள்வியின் முடிவுகளை வகை பிரிக்கும் போது Liberal, Bloc Québécois, புதிய ஜனநாயகக் கட்சி வாக்காளர்கள் இதே விகிதத்தில் தடுப்பூசி மீது ஆர்வம் காட்டுவதை கவனிக்கலாம்.

Liberal வாக்காளர்களிடையே, 87 சதவீதமானவர்கள் தாங்கள் ஏற்கனவே தடுப்பூசி பெற்றுவிட்டதாக அல்லது அவ்வாறு பெற விரும்புவதாக கூறுகின்றனர். Bloc Québécois (84 சதவீதம்), புதிய ஜனநாயகக் கட்சி (83 சதவீதம்) ஆகியவற்றின் வாக்காளர்களுடன் ஒப்பிடத்தக்க முடிவுகளை கவனிக்க முடிகின்றது.

Conservative, பசுமைக் கட்சி வாக்காளர்களில், இந்த விகிதம் 73 சதவீதமாகக் குறைகிறது. இது ஏனைய கட்சிகளின் வாக்காளர்களைக் காட்டிலும் சற்றே குறைவான விகிதமாகும் – ஆனால் அது ஒரு சாதாரண வித்தியாசமாகவே உள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள் பரவலான அறிவியல் எதிர்ப்பு இயக்கம் பற்றிய முக்கியமான நுணுக்கங்களைக் கொண்டுவருவதையும் சாத்தியமாக்குகின்றன. கனடாவில் இந்த சிறுபான்மை வாக்காளர்களின் அரசியல் ஒற்றுமைகள் குறித்த சில தவறான எண்ணங்களை அகற்றவும் அது உதவுகின்றது. Conservative வாக்காளர்களில் கிட்டத்தட்ட நான்கில் மூவர் தாங்கள் ஏற்கனவே தடுப்பூசி பெற்றுள்ளதாகக் கூறுகிறார்கள் அல்லது அதைப் பெறுவதற்கான தங்கள் காத்திருப்பதை உறுதிப்படுத்துகின்றனர்.

இதனால் Conservative வாக்காளர்கள் “தடுப்பூசிகளுக்கு எதிரானவர்கள்” என்று கூறுவது புள்ளிவிவர ரீதியாக தவறானது அல்லது குறைந்தபட்சம் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கும். எவ்வாறாயினும், இந்த புள்ளிவிவரங்கள் தடுப்பூசி எதிர்ப்பு வாக்காளர்களில் கணிசமான பகுதியினர் அரசியல் தராசின் வலதுபுறத்தில் உள்ள கட்சிகளை நோக்கி சாய்வதைக் காட்டுகின்றன.

இந்த எண்ணிக்கை, அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும்போது நிச்சயமாக மாறக்கூடும். தடுப்பூசி குறித்து தயக்கம் காட்டுபவர்களின் எண்ணிக்கை குறையக்கூடும். COVID தொற்றுகள் மற்றும் இறப்புகளின் வீழ்ச்சியுடன் தடுப்பூசிகளின் அதிகரிப்புக்கு இடையேயான தெளிவான தொடர்பை கனேடியர்கள் அறியும் போது – “தடுப்பூசிகளுக்கு எதிரானவர்கள்” என்ற எண்ணிக்கை மிகைக்குறைந்ததாகவே இருக்கும் என்பதே நம்பிக்கை.

(தேசியம் சஞ்சிகையின் June 2021 பதிப்பின் ஆசிரியர் தலையங்கம்)

Related posts

கனடா: தடுப்பூசி வழங்கலில் தோல்வி !

Gaya Raja

வெல்லப்போவது யார்?

Gaya Raja

Leave a Comment