தேசியம்
செய்திகள்

AstraZenecaவை தொடர்ந்து mRNA தடுப்பூசியை இரண்டாவதாக பெறலாம் – NACIயின் புதிய பரிந்துரை

AstraZeneca தடுப்பூசியை தொடர்ந்து mRNA தடுப்பூசியை இரண்டாவதாக பெறலாம் என கனடிய நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

AstraZenecaவை  முதல் தடுப்பூசியாக பெற்றவர்கள் Pfizer அல்லது Moderna தடுப்பூசியை இரண்டாவதாகப் பெறுவது சிறந்தது என NACI  எனப்படும் நோய்த் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு இப்போது பரிந்துரைக்கிறது. AstraZenecaவுடன் தொடர்புடைய இரத்தக் கட்டிகளின் அரிதான பக்க விளைவுகள், கனடாவுக்கான AstraZenecaவின் தடுப்பூசி விநியோகத்தின் அதிகரிப்பு ஆகியவற்றை இந்த ஆலோசனை கவனத்தில் கொள்கிறது.

ஒருவர் AstraZenecaகவின் முதல் தடுப்பூசியையும் mRNAயை இரண்டாவது    தடுப்பூசியாகவும் பெறும்போது, சிறந்த நோய் எதிர்ப்பை பெறலாம் என ஆதாரங்கள் உள்ளதாக NACI கூறுகிறது. mRNAயை முதல் தடுப்பூசியாகப் பெறுபவர்கள் அதே தயாரிப்பை அல்லது மற்றொரு mRNA தடுப்பூசியை இரண்டாவது தடுப்பூசியாக பயன்படுத்த NACI அறிவுறுத்துகிறது.

June மாதம் 5ஆம் திகதி வரை 2.1 million கனடியர்கள் தமது முதலாவது தடுப்பூசியாக AstraZenecaயும், 15,186 பேர் இரண்டு தடுப்பூசியாக AstraZenecaயும் பெற்றுள்ளனர். கனடாவில் இன்னும் 0.6 million AstraZeneca தடுப்பூசி பயன்படுத்தாமல் உள்ளதாக கனடாவின் தடுப்பூசி விநியோகத்தின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் Krista Brodie கூறுகிறார். அவற்றை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிப்பது மாகாணங்களினதும் பிரதேசங்களினதும் பெறுப்பு எனவும் அவர் கூறினார்.

Related posts

போலியான இரண்டு டொலர் நாணயங்கள் கனடா முழுவதும் பாவனையில்?

Lankathas Pathmanathan

NHL Stanley Cup தொடருக்கு நான்கு கனடிய அணிகள் தகுதி

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – September மாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment