December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontario: AstraZenecaவை முதலாவது தடுப்பூசியாக பெற்றவர்கள் இரண்டாவது தடுப்பூசியாக மூன்றில் ஒரு தடுப்பூசியை தெரிவு செய்யலாம்

Ontarioவில் முதலாவது தடுப்பூசியாக AstraZeneca பெற்றவர்கள் இரண்டாவது தடுப்பூசியாக Pfizer அல்லது Modernaவை பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

AstraZeneca  தடுப்பூசியை முதலாவது தடுப்பூசியாக பெற்றவர்கள் வெள்ளிக்கிழமை முதல் இரண்டாவது தடுப்பூசியாக மூன்றில் ஒரு தடுப்பூசியை தெரிவு செய்யலாம் என Ontario  அரசாங்கம் அறிவித்தது. வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மாகாணத்தின் புதிய தடுப்பூசி வழிகாட்டுதலில்  இந்த தகவல் வெளியானது.

 AstraZeneca தடுப்பூசி பெற்றவர்கள் அதே தடுப்பூசியை இரண்டாவது தடுப்பூசியாக பெறலாம் – அல்லது Pfizer அல்லது Moderna தடுப்பூசியை இரண்டாவது தடுப்பூசியாக பெறலாம் என வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டாவது தடுப்பூசி வழங்கல் பரிந்துரைக்கப்பட்ட 12 வார இடைவெளியில் வழங்கப்படும் என மாகாண சுகாதார அமைச்சு அறிவித்தது.

Related posts

கட்டுப்பாடுகளை மீறும் ஒன்று கூடல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

கனமழை காரணமாக Trans-Canada நெடுஞ்சாலை மூடப்பட்டது!

Lankathas Pathmanathan

Quebecகில் COVID கட்டுப்பாடுகள் சில தளர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment