இரண்டாவது COVID தடுப்பூசியை கூடிய விரைவில் வழங்க வேண்டும் என நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு தெரிவித்தது.
கனடாவில் தடுப்பூசிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில் இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொற்றின் காரணமாக கடுமையான நோய் மற்றும் இறப்புக்கான அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி விரைவில் வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளுக்கு இடையில் 16 வார இடைவெளி மிக உயர்ந்த வரம்பாக இருந்த போதிலும்,” மாகாணங்களும் பிரதேசங்களும் தடுப்பூசிகளின் விநியோகம் கிடைத்தவுடன் இரண்டாவது தடுப்பூசியை விரைவாக வழங்க ஆரம்பிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.