December 12, 2024
தேசியம்
செய்திகள்

தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் தட்டுப்பாடு-கனடா அறிந்திருந்தது: கணக்காய்வாளர் நாயகம்

COVID தொற்றுக்கு முன்னர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் (PPE) தட்டுப்பாடு குறித்து கனடா அறிந்திருந்தது என கணக்காய்வாளர் நாயகம்  Karen Hogan தெரிவித்தார்.

கனடா தனது அவசர மருத்துவ கையிருப்பை எவ்வாறு நிர்வகிப்பது என்பதில் சிக்கல்கள் இருப்பதை  கனேடிய பொது சுகாதார அதிகாரிகள் தொற்றின் ஆரம்பத்திற்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக அறிந்திருந்தனர் என புதன்கிழமை வெளியான அறிக்கை ஒன்றில்  கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார். ஆனாலும் இந்த விடயத்தில் நாட்டை தயார்படுத்த  தவறிவிட்டதாகவும் பொது சுகாதார அதிகாரிகள் மீது அவர் குற்றம் சாட்டினார்.  

கடந்த ஆண்டு விலைமதிப்பற்ற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கான தேவை அதிகரித்தபோது  கனடா தயாராக இருக்காததன் காரணம் இந்தச் சவாலை  சரி செய்யத் தவறியது என Hogan கூறினார். தொற்றின் ஆரம்பத்தில், நாட்டின் அவசரகால உபகரணங்களை சரியான முறையில் நிர்வகிக்கவும் இயக்கவும் தேவையான சில அமைப்புகள் மற்றும் நடைமுறைகள் இருக்கவில்லை எனவும்  தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்  

 இந்த சவால்கள் இருந்தபோதிலும், கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தொற்றின் தாக்கம் அதிகரித்ததுடன் விரைவாகச் செயல்பட்டது எனவும்,  N95 சுவாசக் கருவிகள், மருத்துவ ஆடைகள், சோதனை கருவிகளை மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் வழங்க முடிந்ததையும் கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 

Related posts

Ontario Liberal தலைமைப் போட்டியில் Mississauga நகர முதல்வர்?

Lankathas Pathmanathan

Nova Scotiaவில் ஒரு நாளுக்கான அதிக தொற்றுகள் பதிவு

Lankathas Pathmanathan

மற்றுமொரு முன்னாள் வதிவிடப் பாடசாலையில் கல்லறைகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment