18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் May மாத இறுதிக்குள் COVID தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள் என Ontario அரசாங்கம் அறிவித்தது.
அரசாங்கம் 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் மாகாண இணைய முகப்பு மூலம் தடுப்பூசி பெற அனுமதிக்கவுள்ளது. May மாத இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிக்கான முன் பதிவுகள் ஆரம்பிக்கவுள்ளது.
தடுப்பூசி விநியோகத்தில் அதிகரிப்பொன்றையும் Ontario எதிர்பார்க்கின்றது .May மாத ஆரம்பத்தில் சுமார் 8 இலட்சம் Pfizer தடுப்பூசிகளை Ontario பெறும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். May மாத இறுதிக்குள் தடுப்பூசிகளின் விநியோகம் வாரத்திற்கு 9 இலட்சத்து 40 ஆயிரம் வரை அதிகரிக்கவுள்ளது.
இதன் மூலம் May மாதம் 3 ஆம் திகதி தடுப்பூசி பெறக்கூடியவர்களின் வயது எல்லையை 50 ஆக குறைக்க அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். அதன் பின்னர் May மாதம் 10 ஆம் திகதி வயது எல்லையை 40 ஆக குறைக்கவும் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம் May மாதம் 24 ஆம் திகதி தடுப்பூசி பெறக்கூடியவர்களின் வயதெல்லை 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக அறிவிக்கப்படும் என அதிகாரிகள் நம்புகின்றனர்