December 22, 2024
தேசியம்
செய்திகள்

Ontarioவில் விரிவாக்கப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் – அவசர கால நிலை நீட்டிக்கப்படுகிறது!

Ontario மாகாணம் மேலும் COVID தொற்றின் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெள்ளிக்கிழமை அறிவித்தது.வீட்டில் தங்குவதற்கான காலத்தை விரிவுபடுத்துதல், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை கட்டுப்படுத்துதல் உட்பட மேலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. முதல்வர் Doug Ford இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

முதலில் நான்கு வாரங்கள் அறிவிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள அவசர கால நிலையும் வீட்டில் தங்குவதற்கான உத்தரவும் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் Ontarioவின் அவசர கால நிலையும் வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவும் குறைந்தது May மாதம்  20ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Ontario உடனான Manitobaவுக்கும் Quebec மாகாணத்திற்குமான எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.  இந்த மாகாணங்களிடையே அத்தியாவசிய பயணங்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்த இடைநிலை எல்லையில் சோதனைச் சாவடிகளை Ontario மாகாணம் அமைக்கவுள்ளது.

பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கும் மாகாண அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. Golf மைதானங்கள், விளையாட்டு,கூடைப்பந்து, கால்பந்து மைதானங்கள் போன்ற அனைத்து வெளிப்புற பொழுதுபோக்கு வசதிகளும் சனிக்கிழமை முதல் மூடப்பட வேண்டும். சனிக்கிழமை முதல் big box நிறுவனங்கள் 25 சதவீதமானவர்களுடன் மாத்திரம் இயங்க முடியும்.

சனிக்கிழமை முதல் அத்தியாவசியமற்ற அனைத்துக் கட்டுமானப் பணிகளையும் நிறுத்தியுள்ளது திங்கட்கிழமை முதல், வழிபாட்டுத் தலங்களில் அதிகபட்சமாக 10 பேர் மாத்திரமே இருக்க முடியும். திங்கட்கிழமை முதல், திருமணங்கள், இறுதிச் சடங்குகள், மத சேவைகளின் கலந்து கொள்ள கூடியவர்களின் எண்ணிக்கை 10 பேருக்கு மட்டுப்படுத்தப்படும்.

ஒரு வாகனத்தை  அல்லது ஒரு நபரை வீட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணத்தை விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் இருக்கும் என Solicitor General Sylvia Jones கூறினார். பொதுச் சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்த மேலதிக காவல்துறை அதிகாரங்களை முதல்வர் Ford அறிவித்துள்ளார்.

Related posts

Toronto நகர முதல்வரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்த யாழ் நகர முதல்வர்

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் தலைமைத்துவ வேட்பாளர்களின் விவாதம்

Quebec முதியோர் இல்ல கட்டுமான விபத்தில் 5 பேர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment