தேசியம்
செய்திகள்

AstraZeneca தடுப்பூசியை பெற்றுக் கொண்ட Quebec பெண்ணுக்கு இரத்த உறைவு!

கனடாவில் AstraZeneca COVID தடுப்பூசியை பெற்றுக் கொண்ட ஒருவர் இரத்த உறைவு தொடர்பான பக்க விளைவை எதிர்கொள்வதாக முறையிடப்பட்டுள்ளது.

Quebec மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் AstraZeneca தடுப்பூசியுடன் தொடர்புடைய இரத்த உறைவு  பக்க விளைவை எதிர்கொள்கிறார். Quebec சுகாதார அமைச்சகமும் கனடாவின் பொது சுகாதார நிறுவனமும் இந்த தகவலை வெளியிட்டன. குறிப்பிட்ட பெண் குறித்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படாத போதிலும் அவர் சிகிச்சை பெற்ற நிலையில் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என Quebec மாகாண அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

இரத்த உறைவு தொடர்பான பக்க விளைவு காரணமாக கனடாவில் 55 வயதிற்குட்பட்டவர்களுக்கு தற்போது AstraZeneca தடுப்பூசி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Montreal நகரில் நடைமுறைக்கு வந்த plastic பொருட்களின் தடை

Lankathas Pathmanathan

British Colombia வரவு செலவு திட்டத்தில் $4.2 பில்லியன் பற்றாக்குறை

Lankathas Pathmanathan

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் சீன தூதரக அதிகாரியால் அச்சுறுத்தல்?

Lankathas Pathmanathan

Leave a Comment