COVID தொற்றின் மூன்றாவது அலையை Quebec மாகாணம் எதிர்கொள்வதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
Quebecகில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் இந்த அதிகாரப்பூர்வ அறிவித்தலை அமைச்சர் Christian Dubé திங்கட்கிழமை வெளியிட்டார். தொற்றின் பரவலை குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராந்து வருவதாக அவர் கூறினார்.
இந்த நிலையில் கட்டுப்பாடுகளை மீண்டும் வலுப்படுத்துவது குறித்த முடிவை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் முடிவு செய்யும் என அமைச்சர் Dubé தெரிவித்தார்.