தேசியம்
செய்திகள்

55 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி வழங்கலை நிறுத்த NACI பரிந்துரை

55 வயதுக்குட்பட்டவர்களுக்கான AstraZeneca தடுப்பூசி வழங்கலை கனடாவின் பல மாகாணங்கள் நிறுத்துகின்றன.

நேற்று திங்கட்கிழமை NACI எனப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களை அடுத்து இந்த முடிவை மாகாணங்கள் எடுத்துள்ளன. 55 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி வழங்கலை நிறுத்த NACI பரிந்துரைத்தது.

இதனைத் தொடர்ந்து Alberta, Manitoba, Ontario, Quebec, British Columbia, Newfoundland and Labrador ஆகிய மாகாணங்கள் 55 வயதுக்குட்பட்டவர்களுக்கான AstraZeneca தடுப்பூசி வழங்கலை நிறுத்த முடிவு செய்துள்ளன. தமது மாகாணத்தில் இனி எவருக்கும் AstraZeneca தடுப்பூசி வழங்கப்படமாட்டாது என நேற்று காலையே Prince Edward Island அறிவித்திருந்தது.

Nova Scotiaவில் AstraZeneca தடுப்பூசி 60 முதல் 64 வயதுக்கும் உட்பட்டவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் நிலையில் இன்றைய NACIயின் அறிவித்தலால் தமது தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts

கனடாவில் 77 உறுதிப்படுத்தப்பட்ட monkeypox தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் அடுத்த தலைமை விவாதத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை: Leslyn Lewis

தடுப்பூசியை பெற்றுக் கொண்ட Ontario சுகாதார அமைச்சர்

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!