நேற்று புதன்கிழமை வரை 5.82 சதவீதமானவர்கள் மாத்திரம் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்
நேற்று மொத்தம் 4,051 புதிய தொற்றுக்கள் கனடாவில் பதிவாகின. இந்த வாரம் இரண்டாவது தடவை கனடாவில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள் புதன்கிழமை பதிவாகின. இதன் மூலம் கனடாவின் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 9 இலட்சத்து 46 ஆயிரத்து 370 என அறிவிக்கப்பட்டது.
Ontarioவில் 1,571, Quebecகில் 783, British Columbiaவில் 716, Albertaவில் 692, Saskatchewanனில் 190, Manitobaவில் 81, New Brunswickகில் 12, Nova Scotiaவில் 5, Newfoundland and Labradorரில் 1 என புதன்கிழமை தொற்றுக்கள் பதிவாகின.
நேற்று மேலும் 24 பேர் கனடாவில் தொற்றால் மரணமடைந்துள்ளனர். Ontarioவில் 10, Quebecகில் 8, British Columbiaவில் 3, Albertaவில் 2, Saskatchewanனில் 1 என புதன்கிழமை மரணங்கள் அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் கனடாவில் 22 ஆயிரத்து 759 மரணங்களும் பதிவாகியுள்ளன.
Health கனடாவின் தகவல்களின் அடிப்படையில், கனடாவில் மொத்தம் 6 ஆயிரத்து 325 புதிய திரிபுகள் புதன்கிழமை வரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
புதன்கிழமை வரை தொற்றுக்கு எதிராக பாதுகாக்க 4.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர். இது கனடிய மக்கள் தொகையில் 5.82 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.